search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு கூட்டம்"

    • ரவுடி தனத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுகூட்டம் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலத்தில் நடைபெற்றது.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், அனைத்து உட்கோட்ட மற்றும் சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர்களும், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் ரௌடி தனத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் , கஞ்சா, பான்மசாலா, குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் எ, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்ட பட்டது.

    கூட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர்கள் திருத்துறைப்பூண்டி கழனியப்பன், குடவாசல் ராஜ், பேரளம் சுகுணா மற்றும் ஆலிவலம் காவல் சரகத்தில் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்களை இரவு ரோந்தின் போது பிடித்து உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்ட ஆலிவலம் காவல் நிலைய காவலர்கள் சண்முகசுந்தரம் ராஜேஷ் ஆகிய 5 காவல் அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினர். மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி மற்றும் வெகுமதி அளிக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • கொடி நாள் நிதி வசூல் இலக்கை எட்ட கலெக்டர் அறிவுறுத்தல்
    • ரூ. 1 கோடியே 51 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கொடிநாள் வசூல் தொடர்பான அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:- இந்திய ராணுவத்தில் பணியாற்றும் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களை சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் முன்னாள் படைவீரர் கொடிநாள் நிதிவசூல் செய்யப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு நிதி வசூல் தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தமிழக அரசால் ரூ. 1 கோடியே 51 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ரூ.41 லட்சம் எட்டப்பட்டுள்ளது,

    நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கை ஒரு வார காலத்திற்குள் எய்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூல் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் , லோகநாயகி, முன்னாள் படை வீரர் நலத்துறை உதவி இயக்குனர் ஞானசேகர் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் பேரூராட்சியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் முன்னாள் எம்.பி.யும், அமைப்புச் செயலாளருமான அன்வர்ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன் தாஸ்பாண்டியன் , முன்னாள் எம்.பி.யும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கே.ஆர்.பி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், பேரூர் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி அப்பாதுரை, ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ்,இருளப்பன், காளிமுத்து, விவேகானந்தர், கவுன்சிலர் பவானி, மகளிர் அணி செயலாளர்கள் விஜய ராணி, இசக்கியம்மாள், பூத் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்கள் ஆணைய தலைவரிடம் தெரிவித்தனர். மேலும் இத்துறை சார்ந்து பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்குளம், கொங்கந்தான்பாறை பஞ்சாயத்துகளில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஏ.கே. சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் கலந்து கொண்டு பேசினார். பாளை தெற்கு ஒன்றிய செயலாளரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான முத்துக்குட்டி பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இதில் ஒன்றிய அவை தலைவர் செல்ல பாண்டி யன், ஒன்றிய துணை செயலாளர் பூலான், இணை செயலாளர் ரேவதி, பொருளாளர் ரமேஷ், ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், நாராயணன், கிளை செயலாளர் வேல்முருகன், பிரம்மா, பேச்சிமுத்து, ரவிக்குமார், தேரவல்லி, காமராஜர் நகர் தசரதன், பசும்பொன் நகர் கிளை செயலாளர் வீரபுத்திரன், வீரளப்பெருஞ்செல்வி கிளை செயலாளர் நாராயணன், மணல்விளை கிளை செயலாளர் சொர்ணப்ப நாடார், மல்லக்குளம் சுப்பையா, கொங்கந்தான் பாறை கிளை செயலாளர் மரியராஜ், அம்பேத்கார் நகர் கிளை செயலாளர் பரமசிவன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு விடுமுறை நாட்ககளில் ஆய்வு கூட்டங்களை நடத்திடுவதை கைவிட வேண்டும்.
    • இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    நகராட்சி , மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அரசாணை 152 மற்றும் அரசாணை 10-ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும்.

    செயல் திறன் பணியாளர்களுக்கு இரண்டு கட்ட பதவி உயர்வை வழங்கிட வேண்டும்.

    நகராட்சிகளின் தரத்தினை உயர்த்தி புதிய பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.

    அரசு விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு கூட்டங்களை நடத்திடுவதை கைவிட வேண்டும்.

    பிற துறை பணிகளை நகராட்சி மாநகராட்சி ஊழியர்களை கொண்டு ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும்.

    1.10.1996 -க்கு முன்பாக பணியில் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.

    01.04.2003 க்கு பின்பாக பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் இன்று 52 பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    வருகிற 17-ந் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதமும், அடுத்த மாதம் 15-ந் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது என்றுமாநகராட்சி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில தலைவர் வெங்கிடுசாமி தெரிவித்துள்ளார்.

    • மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வு கூட்டம் நடந்தது.
    • உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இப்பகு தியில் சோதனை செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம் வட்ட வழங்க அலுவலர் மகேஷ் கூட்டுரவு சார் பதிவாளர் பிரபா ஆகியோர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மன்னார்குடி பகுதியில் முக்கிய ரேஷன் கடைகளில் மண்ணெ ண்ணெய் தட்டுப்பாடு, கோதுமை தட்டுப்பாடு கடை தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனையை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மநாபன்.

    நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் பேசினர்.

    உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இப்பகு தியில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் கடந்த மாதம் கூறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடி க்கை குறித்தும் விவாதிக்க ப்பட்டது.

    • போலீசாருக்கு டி.எஸ்.பி. உத்தரவு
    • இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்ட காவேரிப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அரக்கோணம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர்களுக்கான ஆய்வு கூட்டம் ராணிப்பேட்டை டி.எஸ்.பி. பிரபு தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் குற்ற வழக்குகள் குறைப்பது, கோப்புக்கு எடுக்காத வழக்குகள், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள், காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து டி.எஸ்.பி., காவல் நிலைய அதிகாரிகளை கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி விசாரணை நடத்த வேண்டும் மேலும் போலீஸ் நிலையங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இதில், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், லட்சுமிபதி, பாரதி, பழனிவேலன், பாரதி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது
    • மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடந்தது.

    இதில் அரசின் பல்வேறு நல திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா? சென்றடையாதவை ஏதேனும் இருந்தாலோ, பின்னடைவு இருந்தாலோ அதை சரி செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது
    • பலர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு 20 புதிய கம்ப்யூட்டர்களை கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

    இதில் கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காவல் கண் காணிப்பாளர் அலுவ லகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவ லகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை தாங்கினார்.

    இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதியப்பட்ட குற்ற வழக்குகளின் நிலையை குறித்தும் மேற்கொண்டு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் காவல் அதிகாரிகளுக்கு, எஸ்.பி. அறிவுரை வழங்கினார்.

    மேலும் இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் வழங்கினார்.

    இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துறை கண்காணிப்பாளர்கள் செந்தில்குமார், ராமச்சந்திரன், மகாலட்சுமி, செல்வி, சிந்து மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தஞ்சையில் வருகிற 14-ந் தேதி புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
    • கண்காட்சியின் மூலம் மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த முடியும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா வருகிற 14-ந் தேதி தொடங்கி தொடர்ந்து 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம், பொது நூலகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் 6-வது புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது.

    மேலும், தஞ்சை புத்தகத் திருவிழா-2023 இலச்சினை வடிவமைப்பு போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தஞ்சை புத்தகத் திருவிழாவுக்கான இலச்சினையை வடிவமைத்து ஒரு எம்.பி. அளவில் ஜே.பி.ஜி. படமாக https://thanjavur.nic.in/thanjavurbookfestival என்ற இணையதளத்தில் தங்கள் பெயர், வயது, முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் நாளை ( வெள்ளி கிழமை) மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்த புத்தகக் கண்காட்சியின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்ப டுத்த முடியும். இதேபோல, புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்படுத்தும் நோக்கத்து டன் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×